Contact Us

Tips Category View

மூலிகை டீ

தேவையான பொருட்கள்:

  • ஆவாரம்பூ-10 
  • ரோஜாபூ-7கிலோ 
  • தாமரைபூ-3 கிலோ 
  • செம்பருத்திபூ-2 கிலோ
  • துளசி-1கிலோ
  • கொத்தமல்லி-10 கிலோ
  • சுக்கு-1கிலோ
  • மிளகு-அரைகிலோ
  • சீரகம்-1கிலோ 
  • கருஞ்சீரகம்-அரைகிலோ
  • திப்பிலி-3/4 கிலோ
  • சதகுப்பை-அரைகிலோ
  • அரத்தை--¼ கிலோ

செய்முறை:

       மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப்பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியதே. இப்பொழுது கூறப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்தால் பத்து முதல் பதினைந்து கிலோ மூலிகை டீதயார் செய்வதற்கான அளவுகளாகும். உங்களுக்கு குறைவாகத் தேவைப்படும் எனில் இந்த அளவுகளில் பாதிஅல்லது கால்பாகம் என்ற அளவில் வாங்கிக்கொள்ளலாம்.

           இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து வெயிலில் ஈரம்படாமல் இரண்டு நாட்கள் காயவைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதில் ஏற்கனவே சில பொருட்கள் பொடியாககிடைக்கலாம். சில பொருட்கள் கெட்டியாகஇருக்கும் கெட்டியாக உள்ள பொருட்கள் நன்றாகஇடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்தோ.தனித்தனியாகவோ மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அரைப்பதற்கு முன்னால் இவற்றில் உள்ள குப்பைகள் கற்கள்இருந்தால் நீக்கிவிடலாம். மிக்சியில் அரைக்கும் பொழுது முடிந்தவரை வேகத்தை குறைவாக வைத்து அரைப்பது நல்லது.

பலன்கள்:

       செரட்டோன் சுரப்பியை சீராகஇயங்கச் செய்வதால் ஒரு மனிதனுக்கு ஆழ்ந்ததூக்கத்திற்கு உதவுகிறது. பார்க்கின்சன், பக்கவாதம், ஞாபக மறதி உள்ளவர்களுக்குசிறந்த மருந்தாக வேலை செய்கிறது. சர்க்கரை, பிபி க்கு மாத்திரை எடுத்துக்கொள்வோர் இதை சாப்பிடுவதால் உடனடிஆரோக்கியம் பெறலாம். உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.