சித்த மருத்துவத்தில் மணப்பாகு தயாரிக்கும் முறைப்படியே டானிக் எனப்படும். சுவையான மணப்பாகு மருந்தும் தயார் செய்யப்படுகிறது. டானிக்குகள் தேவையான மூலிகைகளைப் பச்சையாகவோ, காய வைத்தோ தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கும் பொழுது மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை தண்ணீர் கிரகித்துக் கொண்டு மூலிகை கஷாயமாகிறது. இந்த மூலிகை கஷாயத்தினை நோயாளிக்குக் கொடுக்கும்பொழுது கஷாயத்தின் மருத்துவ குணம் உடலில் ஊக்குவிக்கப்படுவதற்கு ஒரு துணை சக்தியாக சர்க்கரைப் பாகு செயல்பட்டு செய்வதுடன் நோயாளியின் உடலை ஆரோக்கியமாக இயக்குவதற்கு தேவையான சக்தினையும் சாப்பிடுவதற்கு இலவயையும் கொடுக்கின்றன. ஏனெனில் உடலை நோயின்றி காப்பதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு ஒவ்வொருவரின் உடம்பிலும் காணப்படும். இந்த அளவு குறையும் பட்சத்திலேயே நோய்கள் உண்டாகின்றன. அதே போல் நோய்க்குண்டான மருந்தினை செயல்படுத்த உடம்பிற்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி சர்க்கரை (அ) மாவுப் பொருட்களில் இருந்தே பெரும்பாலும் கிடைக்கிறது. எனவே மருந்தின் ஆற்றலை செயல்படுத்தும் பொருட்டு சர்க்கரை போன்ற சக்தியைத் தரக்கூடிய பொருட்கள் மருந்தில் சேர்க்கப்படுகின்றன. மேலும் சர்க்கரை கஷாயங்களை நீண்ட நாள் கெடாமல் அதற்குரிய மருத்துவ குணம் மாறாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருளாகவும் செயல்படுகிறது.