Contact Us

Tips Category View

குளிர்ச்சித் தைலம் (தேரையர் தைல வர்க்கம்)

தேவையான பொருட்கள்:
1. விளக்கெண்ணெய             -500 மி.லி
2. வாழைச்சாறு                           -500 மி.லி.
3. இளநீர்                                        -500 மி.லி
4. பசும்பால்                                  -500 மி.லி
5. பறங்கிப்பட்டை                      -185 கி
6. கொத்தமல்லி விதைகள்      -105 கி
7. பலப்பத்தூள்                            -105 கி
8. சீரகத்தூள்                                -35 கி

தயாரிக்கும் விதம் :
விளக்கெண்ணெய், வாழைச்சாறு, இளநீர் மற்றும் பசும்பாலைப் பாத்திரத்தில் விட்டு மெதுவாக எரித்து, மெழுகு பதத்தில் வடித்து சூடு ஆறுவதற்கு முன்பு நன்கு சலித்து சுத்தம் செய்த பறங்கிப்பட்டைத் தூளை கொத்த மல்லி விதைத் தூள், சீரகத் தூள் மற்றும் பலப்பத்தூள் அதில் தூவி மத்தித்து வைத்து பத்திரப்படுத்தவும்.

உபயோக முறை :
5-8 மி.லி. அதிகாலையில் அல்லது இரவு உணவிற்குப் பின் அருந்தவும். ஒரு மண்டலம் (48 நாள்) வரை குடிக்கவும்.

தீரும் நோய்கள் :
உட்சுரம், தேகச்சூடு, உஷ்ணம் முதலியன தணிந்து குளிர்ச்சி உண்டாக்கும்.