Contact Us

Tips Category View

வாத கேசரித் தைலம் (தேரையர் தைல வர்க்கம்)

தேவையானவை:
1. சதுரக் கள்ளிச் சாறு                 -6 லி
2. நொச்சியிலைச் சாறு                 -6 லி
3. தழுதாழையிலைச் சாறு           -6 லி
4. எருக்கம் பால்                               -6 லி
5. நல்லெண்ணெய்                         -6 லி
6. ஆமணக்கெண்ணெய்              -6 லி
7. வெள்ளைப்பூண்டு                     -10 கி
8. பெருங்காயம்                              -10 கி
9. கந்தகம்                                         -10 கி
10. கோஷ்டம்                                     -10 கி
11. சுக்கு                                               -10 கி
12. மிளகு                                        -10 கி
13. திப்பிலி                                         -10 கி
14. கடுகு                                         -10 கி
15. வெள்ளாட்டுப் பால்                    -6 லி

செய்முறை :
1-6 வரையுள்ள சரக்குகளை கலந்து அத்துடன் 7 - 14 வரையுள்ள சரக்குகளை வெள்ளாட்டுப் பாலில் அரைத்துச் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.

உபயோக முறை :
வெளி  உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள் :
தீராத வாத ரோகங்கள், ஏழு தாதுக்களில் கலந்த திமிர்வாதம், பாரிச வாயு, முடக்கு வாதம், மூட்டு வாதம், சூலைக் கட்டு, தசைப் பிடிப்பு மற்றும் ஊமைக் காயங்கள் ஆகியன தீரும்.