Contact Us

Tips Category View

செம்பருத்தி கூந்தல் தைலம் (சித்த வைத்திய அனுபவ முறை)

தேவையான பொருட்கள் :
1. செம்பருத்தி பூ சாறு                      -200 மி.லி.
2. அவுரி இலைச்சாறு                        -200 மி.லி.
3. துளசிச்சாறு                                     -100 மி.லி.
4. அருகம்புல்சாறு                              -100 மி.லி.
5. மருதாணி இலைச்சாறு                -100 மி.லி.
6. கருவேப்பிலைச்சாறு                    -200 மி.லி.
7. அகத்திப் பூ சாறு                            -200 மி.லி.
8. வெள்ளை மிளகு                             -10 கி
9. அதிமதுரம்                                       -10 கி
10. தேங்காய் எண்ணெய்                 - 100 மி.லி.
11. வல்லாரை சாறு                             -200 மி.லி.

தயாரிக்கும் விதம் :
மேற்கண்ட சாறுகளையும் வெள்ளை மிளகு மற்றும் அதிமதுரம் தூளையும் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.

உபயோகம் :
தினமும் தலைக்கு நன்றாக மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து வரவும்.

தீரும் நோய்கள்:
முடி உதிர்வதைத் தடுக்கிறது. இளநரையைப் போக்குகிறது.