தேவையான பொருட்கள்:
செய்முறை:
பட்டாணியை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு, தேங்காய், பச்சைமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்புப் பொருட்களை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், உருளைக் கிழங்கினையும் சேர்த்து இளம் சூட்டில் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா பொடி, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின் அரைத்து வைத்ததேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து குருமா இறுகியவுடன் கொத்தமல்லியைத் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. பட்டாணியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கேமற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உதடுவெடிப்பு, இரத்தக்கசிவு உள்ள ஈறுகள் நோய்கள்குணமாகும்.