Contact Us

Tips Category View

வரகு மினிமசாலா ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்:

  • வரகுதோசை மாவு- 1கப்
  • காரட்துருவல்- ¼ கப் 
  • மிளகாய்த்தூள்- 1/4  டீஸ்பூன்
  • கறிவேப்பிலைசிறியது 
  • நல்லெண்ணெய்தே அளவு 
  • கடுகு, கடலைப்பருப்பு,உ பருப்பு தலா- 1 டீஸ்பூன் 
  • கொத்தமல்லிசிறிதளவு
  • உப்புதேவைக்கேற்ப

செய்முறை:

        எண்ணெயில் கடுகு,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு சோத்து பொன்னிறமானதும் மாவில் சோக்கவும். காரட் துருவல் மற்றும் மிளகாய் பொடியையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்பு சிறிது சேர்த்து நல்லெண்ணெய் சிறிது சோக்கவும். மாவை நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிய ஊத்தாப்பங்களாக வார்க்கவும்.இரண்டு பக்கம் வேகவிட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.

பலன்கள்:

காரட்டில்வைட்டமின் ஏ.சி. கே. பி8. ஃபோலேட், இரும்பு, தாமிரம், பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. கடலைப்பருப்பில் புரதம், இரும்புச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலு தருகிறது. வாதநோய் உள்ளவர்கள் வரகு மாவை தொடர்ந்துஎடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணம் பெறலாம்.