Contact Us

Tips Category View

வரகு மசாலாவடை

தேவையான பொருட்கள்:

  • வரகுஅரிசி - ¼ கப் 
  • துவரம்பருப்பு -1/4 கப் 
  • கடலைபருப்பு -1/4 கப் 
  • சோம்பு -1டீஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -2 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • வெங்காயம் - சிறிதளவு 
  • புதினாஇலை - 2 
  • உப்பு – தேவைக்கேற்ப 
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

         கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரைவடித்து மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் உப்பு, புதினா மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடுபடுத்தவும். மாவை சிறிது சிறிதாகஎடுத்து வடைகளாக தட்டி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடான வரகு வடை தயார்.

பலன்கள்

       நரம்பு மண்டலக் கோளாறுகளை வரகு உணவுகள் நிவர்த்திசெய்கின்றன.சிறுநீரைப் பெருக்கி,உடல் நச்சுக்களை நீக்கும்ஆற்றல் சோம்பிற்கு உண்டு. புதினாவில் வைட்டமின் ஏ,டி, தயமின், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. வரகு மசாலா வடை சிற்றுண்டியாக தயாரித்துஉண்ணலாம். மருத்துவ குணம் நிறைந்தது.