தேவையானபொருட்கள்:
உருளை மசாலாகிழங்கு:
செய்முறை:
மாவுக்குத் தேவையான பொருட்களை (அரிசி, வெந்தயம் மற்றும் பருப்பு வகைகள்) இவற்றை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நன்கு மையாக கிரைண்டரில் அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து கடுகு, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும். உருளைக்கிழங்கை மசித்து போடவும். உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவுஊற்றி வட்டமாக மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெய் சேர்க்கவும். ஒருபுறம் வெந்து மொறுமொறுப்பானவுடன் மசாலாவை உள்ளே வைத்து அப்படியே மூடிவிடவும். சிறிது எண்ணெய் சோக்கவும். திருப்பிப் போட்டு, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலை அகற்றுகிறது. சிறுகுடல் உறிஞ்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனுடன் இரும்புச்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் இரத்தக் கழிச்சல் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும்ஆற்றல் கொண்டது.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி.பி காம்ப்ளக்ஸ்நிறைந்துள்ளது. இவை உடல் சருமத்திற்குஏற்றது,கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் செரட்டோன். டோபமைன் ஹார்மோன்களை சீராக தூண்டி ஆரோக்கியமடைய செய்கிறது. அரிசி, பருப்பு,வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.