தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசியை நன்குஅலம்பி 1கப் தண்ணீர் விட்டுவேகவிடவும். குக்கரில் 3 விசில் விடலாம். நன்கு ஆறியவுடன் கரண்டியால் குழைத்து பால் சேர்க்கவும். உப்புமற்றும் தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் கைகளால் நன்கு பிசையவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளிக்கவும். இதை சாதத்தில் சேர்த்துநன்கு கிளறி பச்சை மிளகாயை எடுத்துவிடவும். ஜில்லென்று தயிர் சாதம் தயார்.
பலன்கள்:
பசியின்மை உள்ளவர்கள் இஞ்சி, பெருங்காயம் சேர்ந்த வரகு தயிர்ச்சாதம் உண்பதால்ஜீரண மண்டலம் தூண்டப்படுகிறது. கறிவேப்பிலை. கொத்தமல்லி ஆகியன சேர்க்கப்படுவதால் இரத்த சோகையை தடுக்கிறது.இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்த வரகு உணவுகள் எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.