தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த கொண்டைகடலை மற்றும் ஊறவைத்த வரகு சேர்த்து 1 கப்தண்ணீர் சேர்த்து விசில் போடாமல் வேகவைக்கவும்.வரகுஅரிசி வெந்ததும் கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:
இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதை கொண்டைக்கடலை தடுக்கும் ஆற்றல் கொண்டது. புரதம், மாவுச்சத்து, போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயநோளிகள் சாப்பிட ஏற்றது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உணவிற்கு உள்ளது.