Contact Us

Tips Category View

திணைபால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  • திணைமாவு - 1/2கப்
  • தண்ணீர் - 1/4கப்
  • பால் - 1/4கப்
  • தேங்காய்பால் - 1/4கப்
  • (மீண்டும்) தனியாகதேங்காய்பால் - 1/2கப்
  • நெய் - 1/2 தேக்கரண்டி
  • நாட்டுச்சர்க்கரை - 4 டீஸ்பூன்
  • ஏலக்காய்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

      அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து திணைமாவைசேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். நெய் சேர்த்து மெல்லியதீயில் வைத்து நன்கு கிளறவும். கெட்டியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை மூடி வைக்கவும். ஒருகடாயில் 1/2கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்து லேசாககொதி வந்தவுடன் உருண்டைகளை சேர்க்கவும்.5நிமிடம் மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும். நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கி உடனடியாக அடுப்பை அணைக்கவும். ஆறியவுடன் கெட்டியாகிவிடும்.

பலன்கள்:

      புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்தஉணவு, தேங்காய் பால் உடல் வளர்ச்சிக்குபோதிய சத்துக்களை அளிக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பார்வைத்திறன், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.