Contact Us

Tips Category View

திணை முறுக்கு

தேவையான பொருட்கள்:

  • கடலைமாவு -1/4கிலோ
  • திணைஅரிசிமாவு - 1/2கிலோ
  • சீரகம் -1டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
  • எள் -1 டீஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -1/2லிட்டர்பைகள்

செய்முறை:

      இரண்டு மாவையும் சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும், அத்துடன் சீரகம்,எள்,மிளகாயத்தூள், உப்பைச்சேர்க்கவும் பின் தேவைக்கு சிறிதளவுஎண்ணெய் ஊற்றி பிசையலாம். வெந்நீரை மாவில் ஊற்றிப் பிசையவும். மாவு சரியான பதத்தில்இருக்கவேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது. அதே போல் வடைமாவுபோல நீர் சேர்த்து இருக்கக்கூடாது. பின் அச்சில் மாவைப்போட்டு முறுக்கைச் சூடான எண்ணெயில் பிழிந்து சுட்டு எடுக்கவும்.

பலன்கள்:

        பித்தம் மற்றும் செரிமானக் கோளாறை சரி செய்யும். சீரகம் ,எள்ளில் உள்ள இரும்புச்சத்து இரத்தம் சீரமைப்பிற்கும், ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவி செய்கின்றன.மாவுச்சத்துகள் புரதச்சத்து நிறைந்தது. உள்ளதால் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.