தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசியை 1 மணிநேரம்தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் மிளகாய், உப்பு, பெருங்காயம், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஆவியில் 15 நிமிடம் வேகவிடவும். நன்கு கெட்டியாக இருக்கும் இட்லிகளை ஆறவைத்து மிக்ஸியில் ஒரு திருப்பு, திருப்பிஉதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு மற்றும் வெங்காயம் சேர்த்து,வதக்கி உதிர்ந்த திணை கலவையை சேர்க்கவும், சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான புட்டு தயார். சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
பித்தம், கபநோய்கள் சரியாகும். பெருங்காயம்,வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸின்ட்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கடுகு தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்கும்.