Contact Us

Tips Category View

திணை பாயாசம்

தேவையான பொருட்கள்:

  • திணை அரிசி -1/4கிலோ 
  • வெல்லம் - 200 கிராம் 
  • பாசி பருப்பு -100 கிராம் 
  • ஏலக்காய், முந்திரி, திராட்சை -தே. அளவு 
  • நெய் - தேவையான அளவு 
  • பால் - தேவையான அளவு 

செய்முறை:

      திணை அரிசி,பாசிபருப்பு இரண்டையும் தனித்தனியாகபொன்னிறமாக வறுத்து ரவை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் மூன்று மடங்கு நீர் (அல்லது) காய்ச்சிய பாலில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நெய்யில் முந்திரி திராட்சை ஏலக்காய் வறுத்து பாயாசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்.

பலன்கள்:

        மாவுச்சத்து நிறைந்த திணையில் செய்யப்படும் திண்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வெல்லம், பாசிப்பயிறு முந்திரி, திராட்சை ஆகியவற்றின் கூட்டுக்கலவையில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. இந்த பாயசம் உடல்வலு குறைந்திருப்பவர்களுக்கும்,இரும்புச்சத்து பீட்டா கரோட்டின், கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்.