தேவையான பொருட்கள்:
செய்முறை:
உளுந்து மற்றும் கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் கழுவி ஊறவைக்க வேண்டும். திணையைச் சுத்தம் செய்து சிறிதளவு வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்,ஊற வைத்த அனைத்தையும், ஒன்றாகச் சேர்த்துக் குருணையாக அரைத்துக் கொள்ளவும், தேவையான சோம்பு உப்பை சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவைக்கவும், மறுநாள் தோசை மாவு பதத்துக்குத்தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவேண்டும்,நறுக்கி வைத்த காய்கறிகளை கலந்து பின்பு தோசைக் கல்லில் அடையாகத் தட்டி சுட்டு எடுக்கவும்.
பலன்கள்:
திணையில் இரும்பு சத்து இருப்பதனால் இரத்த சோகை வராமல் காக்கும். கடலைப்பருப்பில் உள்ள புரதச்சத்து தசைவளர்ச்சிக்கு உதவும். உளுந்தம் பருப்பு, தேங்காயில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியமானஉடல் எடை பெற உதவும்.