Contact Us

Tips Category View

திணை தோசை

தேவையான பொருட்கள்:

  • திணைஅரிசி -3கப்
  • வெந்தயம் - 2 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு -1 கப் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தே.அளவு

செய்முறை:

      உளுத்தம்பருப்பு வெந்தயத்தை நன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். திணை அரிசியை 3 முறைநன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும், பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்து, உப்பைச் சேர்த்து 6 முதல் 8 மணிநேரம் மூடிவைக்கவும்.மாவு நன்றாக புளித்தவுடன்நன்றாக கலக்கி உப்பு சேர்த்து தோசைகளாக வார்க்கவும், இதை வெங்காயச் சட்னியுடன்பரிமாற சுவையாக இருக்கும்.

பலன்கள்:

       புரதச்சத்தும், மாவுச்சத்தும் நிறைந்து உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வெந்தயம் உடலை வலுவாக்கவும், செரிமானத்திறனைஅதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல்மேம்படும்.