Contact Us

Tips Category View

திணை அரிசி உப்புமா

தேவையானபொருட்கள்:

  • திணைஅரிசி- 1/2கப்
  • நறுக்கியபெரியவெங்காயம் – 1
  • தண்ணீர் - 3 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1 டேபிள் டீஸ்பூன்
  • உளுந்து -3/4 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலைசிறிதுநறுக்கிய பச்சைமிளகாய் - 1

செய்முறை:

        திணை அரிசியை நிறம்  மாறாமல்மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும். ஒரு பாத்திரத்தினை அடுப்பில்ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன்திணை அரிசியைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு அந்தப் பாத்திரத்தை மூடி நன்றாக வேகவிடவும், கறிவேப்பிலைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும். கொத்தமல்லிச் சட்னி அல்லது குடமிளகாய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்:

         எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு, உளுந்து , கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்உடல் சூட்டைத் தணிக்கின்றன. சளி காய்ச்சலில் இருந்துவிரைவில் விடுபடச் செய்து ஆரோக்கியம் தரும்.