Contact Us

Tips Category View

சோள வடை

தேவையான பொருட்கள்:

  • சோளம் -1கப் 
  • பச்சைப்பயிறு- 1/2கப் 
  • கடலைப்பருப்பு -3 தேக்கரண்டி 
  • அரிசிமாவு - 3 தேக்கரண்டி 
  • உப்பு -தேவைக்கேற்ப 
  • பெ.வெங்காயம் நறுக்கியது -2 
  • பூண்டு - 5 பல் 
  • சீரகம் - 1 தேக்கரண்டி 
  • நறுக்கியகொத்தமல்லி,கருவேப்பிலை - சிறிதளவு 
  • துருவியதேங்காய் -2 டீஸ்பூன் 
  • எண்ணெய் -தேவைக்கேற்ப 
  • பச்சைமிளகாய் - சிறிதளவு

செய்முறை:

           சோளம்,பச்சைபயிறு, கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும் ஒருமணிநேரம் ஊறவைக்கவும், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து குருணை போல் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்னர் தேவையானஉப்பு தேங்காய் சேர்த்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் வடைகள் தட்டி பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

பலன்கள்:

          சோளத்தில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை வலுவாக்குகிறது. பச்சைப்பயிறில் நார்ச்சத்தும் ஓரளவு கொழுப்புச் சத்தும் உள்ளதால் ஜீரணம் எளிதாகிறது. வைட்டமின் A, E, C, K மற்றும் பி காம்பளக்ஸ் ஆகியனஇதில் அடங்கியுள்ளன. சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.