Contact Us

Tips Category View

சோள ரொட்டி

தேவையான பொருட்கள்:

  • சோளமாவு-1கப் 
  • நா.சர்க்கரை - 1 டீஸ்பூன் 
  • எண்ணெய் - தே. அளவு 
  • வெந்நீர் - தேவையான அளவு 
  • உப்பு, வெந்நீர் - தே. அளவு 
  • நெய் - சிறிதளவு

செய்முறை:

        சோள மாவை, உப்பு, நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து வெந்நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாகச் செய்துஎண்ணெய் தடவி சப்பாத்தியாக தேய்த்து. சூடான கல்லில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுட்டபின் சிறிது நெய் தடவி பரிமாறலாம்.சோள ரொட்டி சூடாக இருக்கும் போது மிருதுவாகவும், ஆறியதும் சிறிது மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

பலன்கள்:

       சோளம் உடலை உறுதியாக்கும். புரதம்,இரும்புச்சத்து,கால்சியம் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யப்படுவதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது.