Contact Us

Tips Category View

சோள பனியாரம்

தேவையான பொருட்கள்:

  • சோளம்- 1 கப் 
  • உளுந்து -1/4கப் 
  • இட்லிஅரிசி -1/2கப் 
  • பொடியாகநறுக்கிய பெரிய வெங்காயம் -2 
  • மிளகாய்வற்றல் - 8 
  • சீரகம் - 1 டீஸ்பூன் 
  • கருவேப்பிலை - சிறிது 
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • தண்ணீர், உப்பு, எண்ணெய் - தே.அளவு 
  • கடலைபருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

      சோளம்,உளுந்து,இட்லி,அரிசி ஆகியவற்றை 3 மணிநேரம் ஊறவைத்து கரகரவென்று அரைக்கவும். ஒருநாள் புளிக்க வைத்து,வாணலியில் ஒரு பெரிய கரண்டிஎண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் வற்றல் போட்டு நன்கு வதக்கி புளித்த மாவில் கொட்டி 10 நிமிடம் கலந்து வைக்கவும். பிறகு பனியார சட்டியில் ஊற்றி எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

பலன்கள்:

       சோள மாவும்,இட்லிமாவும் சேர்த்து உள்ளதால் எளிமையாக ஜீரணிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. சீரகம் புண்களை குணப்படுத்தும். கறிவேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும்.