தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும்சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரைவிட்டே மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அத்துடன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலக்கி ஆப்பச்சட்டியில் ஊற்றவும். அதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் ,மிளகு,தூவி,மூடி போட்டுமிதமான சூட்டில் வேகவைத்து எடுத்து சாப்பிடவும். சட்னி சாம்பார், இட்லி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்.ஊத்தாப்பம் மாவில் தண்ணீர் கலந்து சோள தோசையாகவும் சுடலாம்.
பலன்கள்:
தயமின் மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் நீங்கும். உளுந்தில் உள்ள புரதச்சத்து உடலுக்குத்தேவையான ஆற்றலை வழங்குகிறது.வெந்தயம் பித்த நீர் சுரப்பை மேம்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. மிளகு தொண்டை கரகரப்பை போக்கும்.