தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து. வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும். அரைத்த மாவையும் சேர்த்து லேசான தீயில் வனக்கவும். மாவுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும். ஆறியதும்கெட்டியான உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும். எள்ளுஇட்லிப்பொடி, காரசட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
புரதம், கார்போ ஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன. கடலை,உளுந்து பருப்புகளில் புரதம் அதிக அளவில் உள்ளன. கறிவேப்பிலை,கொத்தமல்லி இலைகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.