Contact Us

Tips Category View

வேர்க்கடலை துவையல்

தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடலை -50கிராம்
  • வரமிளகாய் - 2
  • உப்பு - தேவைக்கேற்ப
  • பூண்டு -4 பல்
  • தேங்காய் துருவல் -2 டீஸ்பூன்

செய்முறை:

      வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்துருவல்,பூண்டு,வரமிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற துவையலாகும்.

பலன்கள்:

        வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதயத்தை காக்கும் அரணாகி செயல்புரிகிறது. பூண்டு செரிமானத்தை மேம்படுத்தும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். மூஃயா எனும் ஒற்றை நிறைவழர் கொழுப்பு அமிலம் இருப்பதால் நல்ல கொழுப்பை சேர்த்துகெட்ட கொழுப்பை நீக்குகிறது. உடலை வலுப்படுத்தும் துவையல்.