Contact Us

Tips Category View

முருங்கை துவையல்

தேவையான பொருட்கள்:

  • சுத்தம்செய்த முருங்கை இலை - 50 கிராம்
  • இஞ்சி - ஒரு சிறியதுண்டு
  • பூண்டு - 5 பல்
  • புளி – சிறிதளவு
  • தக்காளி -1
  • வரமிளகாய் – 2
  • சின்னவெங்காயம் – 5
  • கடலைபருப்பு,உளுந்துபருப்பு,தலா-1 டீஸ்பூன்
  • உப்பு - தே.அளவு
  • எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

       வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்தவுடன்.கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பைபொன் நிறமாக வறுக்கவும். பின்பு வரமிளகாய் பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம், தக்காளி, புளி, முருங்கை இலை இவையனைத்தையும் சேர்த்துவதக்கி ஆறியபின் உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புச்சத்து நிறைந்தசத்தான துவையலாகும்.

பலன்கள்:

        கால்சியம்,இரும்பச்சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. உளுந்து, கடலைப்பருப்பில் உள்ள புரதம் உடல்வளர்ச்சிக்குஉதவுகிறது.