Contact Us

Tips Category View

புதினா துவையல்

தேவையான பொருட்கள்:

  • புதினாஇலை - 100கிராம்
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சிஒரு சிறியதுண்டு
  • வரமிளகாய் – 3
  • கடலைப்பருப்பு,உளுந்துபருப்பு தலா - 1ஸ்பூன்
  • புளி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • சி.வெங்காயம் – 5
  • தக்காளி -1
  • எண்ணெய்தாளிக்க-தே அளவு

செய்முறை:

      வணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு,வரமிளகாய் சின்னவெங்காயம்,தக்காளி இவற்றையும் புதினா இலையையும் சேர்த்து வதக்கவும். புளியையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறியவுடன் உப்பு சேர்த்து அரைக்கவும் சுவையான புதினா துவையல் ரெடி.இது ஜீரணத்தை முறைபடுத்தி. பசியைத் தூண்டுகிறது.

பலன்கள்:

     வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புசத்து, ஆகியன இதில் அதிகம் உள்ளன. வயிறு மந்தம். வாயுப்பிடிப்பு ஆகியன போக்கும். வைட்டமின் பி 6, சி, பொட்டாசியம் நிறைந்தது மலச்சிக்கலை நீக்கும்.