Contact Us

Tips Category View

பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள்:

  • சுத்தம்செய்தபிரண்டை - 50 கிராம்
  • இஞ்சி - ஒரு சிறியதுண்டு
  • பூண்டு - 5 பல்
  • புளி – சிறிதளவு
  • வரமிளகாய் – 2
  • சின்னவெங்காயம் – 5
  • கடலைபருப்பு, உளுந்துபருப்பு,தலா 1 டீஸ்பூன்
  • உப்பு - தே.அளவு
  • எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

       வாணலியில் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு. உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சின்னவெங்காயம், புளி சுத்தம் செய்தபிரண்டை இவை அனைத்தையும் நன்குவதக்கவும். வதங்கியவுடன் உப்பு சேர்த்து ஆறியபின் அரைக்கவும்.

பலன்கள்:

        இது பசியைத் தூண்டி ஜீரணத்தை எளிதாக்குகிறது. நாக்கின் சுவையற்ற தன்மைக்கு நல்ல மருந்தாகிறது. வைட்டமின்சி. மற்றும் சிட்டோசிரால் எனும் அமினோ அமிலம் அடங்கியது. அஜீரண கோளாறு, ஒழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.