Contact Us

Tips Category View

கொத்தமல்லி துவையல்

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லிதழை -100கிராம் 
  • பூண்டு - 5 பல் 
  • இஞ்சிஒரு சிறிய துண்டு 
  • வரமிளகாய் - 3 
  • கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு தலா - 1 டீஸ்பூன் 
  • புளி - சிறிதளவு 
  • உப்பு -தேவைக்கேற்ப 
  • சின்னவெங்காயம் 5 
  • தக்காளி-1
  • எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

      வாணலியில் எண்ணெய் கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் தக்காளி இவற்றை முறையே வதக்கி கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியில் புளி, உப்பு சேர்த்து கிளறி அரைத்துக் கொள்ளவும்

பலன்கள்:

       கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. ஜீரணத்தை எளிதாக்கும்.உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்ஆற்றல் கொண்டது. தோல் நோயைக் குணப்படுத்தும்.