Contact Us

Tips Category View

கறிவேப்பிலை துவையல்

தேவையான பொருட்கள்:

  • கறிவேப்பிலை -100கிராம்
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சிஒரு சிறிய துண்டு
  • வரமிளகாய் – 3
  • கடலைப்பருப்பு,உளுந்து பருப்பு - 1 டீஸ்பூன்
  • புளிசிறியதளவு
  • தக்காளி- 1
  • சின்னவெங்காயம் – 5
  • உப்பு -தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தாளிக்க

செய்முறை

       வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு. வரமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, புளி இவற்றை முறையேவதக்கி கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புசத்தும், கால்சியமும்நிறைந்தது முடிவளர்ச்சியைத் தூண்டக்கூடிய துவையலாகும்.

பலன்கள்:

       கூந்தலின் வலுவை அதிகரிக்க உதவுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது என்பதால் ஆரோக்கியம் சிறக்கும். வைட்டமின் சி, மக்னீசியம் ஆகியனநிறைவாக உள்ளது.