Contact Us

Tips Category View

கடலைபருப்பு துவையல்

தேவையான பொருட்கள்:

  • கடலைபருப்பு - 25கிராம்
  • புளி – சிறிதளவு
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 2 பல்
  • தேங்காய் - துருவல் 1 மூடி
  • காய்ந்த - மிளகாய் 2
  • உப்பு - தேவையான அளவு
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

      வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும். கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய்,கடலைபருப்பு,இஞ்சி,பூண்டு,புளி இவற்றை சேர்த்துநன்கு வறுக்கவும். வறுத்தவுடன் தேங்காய் பூவையும் இறுதியாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஆறியவுடன் அரைக்கவும்.

பலன்கள்: 

      நார்ச்சத்து,புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்தது.எலும்புகளின் வளர்ச்சிக்கும்,உறுதிக்கும் பக்கபலமாக இருக்கிறது.இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகையை தடுக்கும்.குழந்தைகள்,பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதுவையல்.