Contact Us

Tips Category View

தண்டுக்கீரை சூப்

தேவையான பொருட்கள்:

  • பாசிபயறு - 50 கிராம்
  • தண்டுக்கீரை - 25 கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிஇலை – சிறிதளவு
  • எண்ணெய் - தே.அளவு

செய்முறை

           பாசிபயறை நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், நறுக்கிய தண்டுக்கீரை இவற்றை சேர்த்து வதக்கி வேகவைத்த பாசிபயறை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். சோளமாவையும் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.

பலன்கள்:

      வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் சரி செய்யும். உடலின்பித்த அளவைக் குறைக்கும். இதயம் வலுப்பெற உதவுகிறது. எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத்தடுக்கும்.