Contact Us

Tips Category View

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:

  • பாசிபருப்பு - 50 கிராம்
  • தக்காளி – 2
  • மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • பட்டை, கிராம்புபொடி - 1/2 டீஸ்பூன்
  • மக்காச்சோளம் - 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய்தாளிக்க
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் - 8

செய்முறை:

       முதலில் பாசிபருப்மை 2 டம்ளர்தண்ணீர் விட்டு வேகவைத்து  தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டைகிராம்பு தூள், இஞ்சி,பூண்டுவிழுது சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை முறையே  வதக்கவும்நன்கு வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணிரையும்அதில் ஊற்றவும்.அதனுடன் சோளமாவு 1 டீஸ்பூன் சேர்த்து கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள்சீரகத்தூள் சேர்த்து  இறக்கவும் .புதினா இலை தூவி பரிமாறலாம்.

பலன்கள்

      வயிற்றில் ஏற்படும் பித்தம்குறையும். இரும்புச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவை இதில் நிறைவாக உள்ளது. தக்காளியில் லைக்கோஃபீன் எனும் கரோட்டினாய்டு சத்து இருப்பதால் நுரையீரல், மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும்.