Contact Us

Tips Category View

காளான் சூப்

தேவையான பொருட்கள்:

  • பாசிபருப்பு - 50 கிராம்
  • சிறுதுண்டுகளாகநறுக்கியகாளான் - 25கிராம்
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8
  • இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்
  • மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • பொடியாகநறுக்கியகருவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு

செய்முறை:

        பாசிபயிறை நன்கு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காளான் இவையனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் வேகவைத்த பாசிபயறையும், மக்காசோள மாவு 1 ஸ்பூனையும் சேர்த்து வேகவிடவும். நன்கு கொதித்தவுடன், மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சோத்து இறக்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பலன்கள்:

         மிகுதியாக உள்ள கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்கும். மார்பகம், புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற சூப். நோய்எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.