தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய சின்னவெங்காயம், சேர்த்து வதக்கவும். வதங்கிய உடன் அகத்திக்கீரை, வேகவைத்த பாசிபயிறு இவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
பலன்கள்:
வைட்டமின் ஏ,சி, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும்,வயிற்றுப்புண், அல்சர் பிரச்சனையை குணமாக்கும். கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளது. வாய்ப்புண் குணமாகும்.