Contact Us

Tips Category View

காளிபிளவர் சாலட்

தேவையான பொருட்கள்:

  • காளிபிளவர் - 50 கிராம்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  • வேர்.கடலைத்தூள் - 1 ஸ்பூன்
  • பொ.கடலைத்தூள் - 1 ஸ்பூன்
  • நறுக்கிய சி. வெங்காயம் – 5
  • உப்பு - தே.அளவு
  • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லிஇழை – சிறிதளவு
  • தேங்காய்துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை:

         முதலில் காளிபிளவரை சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள், உப்பு கலந்து சுத்தம் செய்து காளிபிளவரை அதில் போட்டு வைக்கவும்.10 நிமிடத்திற்குப் பிறகு, நீரை நன்கு வடித்துவிட்டுகாளிபிளவரை காய் துருவியில் பொடியாகதுருவிக்கொள்ளவும். இதனுடன் மற்ற அனைத்து பொருட்களையும்கலந்து 5 நிமிடத்திற்குப் பிறகு பரிமாறலாம். இது சுவைமிக்க ஒருசாலட் ஆகும்.

பலன்கள்:

         கொலைன் சத்து இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் சி நிறைவாக இதில்உள்ளது. பைடோ நியூட்ரின்ஸ். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நாள்பட்ட வியாதிகளின் தீவிரம் குறையும். எலும்பு தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.