Contact Us

Tips Category View

முள்ளங்கி சாலட்

தேவையான பொருட்கள்:

  • முள்ளங்கி -50 கிராம்
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1/4டீஸ்பூன்
  • வேர்க்கடலைதூள்-2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலைத்தூள்-2 டீஸ்பூன்
  • நறுக்கிய சி.வெங்காயம் – 5
  • உப்பு -தேவைக்கேற்ப
  • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இழை – தேவைக்கேற்ப
  • தேங்காய்துருவல் - 5 டீஸ்பூன்

செய்முறை

       முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாகதுருவிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து சிறிது நேரத்திற்குப் பின் பரிமாறவும். இதுஇருதயத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தினைத் தருகிறது.

பலன்கள்:

      புற்றுநோய் செல்களை வளரவிடாமல்தடுக்கும். மூல நோய் இருப்பவர்கள் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா, தொண்டை எரிச்சல், சுவாசக் கோளாறுகள் சரியாகும்.