Contact Us

Tips Category View

வாழைத்தண்டு சாலட்

தேவையான பொருட்கள்:

  • நார் நீக்கிய வாழைத்தண்டு - 50 கிராம் 
  • மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • வே.கடலை தூள் - 1 டீஸ்பூன்
  • பொ.கடலை தூள் - 1 டீஸ்பூன்
  • நறுக்கிய சி.வெங்காயம் - 5 
  • உப்பு-தேவையான அளவு 
  • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு 
  • தேங்காய்துருவல் - 2 டீஸ்பூன்

செய்முறை:

       வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாகநறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து தேங்காய் துருவலை மட்டும் இறுதியாக சேர்த்து பரிமாறலாம்.

பலன்கள்:

        இது சிறுநீரகக் கற்களைகரைத்து உடலுக்கு வலிமையை தருகிறது. வைட்டமின் A இருப்பதால் கண்களுக்கு நல்லது. உடலில் உள்ள தொற்றுகள், கழிவுகள், ஆகியவற்றை வெளியேற்றும். நார்ச்சத்தும் இருப்பதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.