Contact Us

Tips Category View

அரைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

  • அரைக்கீரை -100கிராம் 
  • பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம் – 5
  • எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • வே.கடலைத்தூள் - 1 டீஸ்பூன் 
  • பொ.கடலைத்தூள் - 2 டீஸபூன் 
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • தேங்காய்துருவல் - 20 கிராம்

செய்முறை:

         முதலில் அரைக்கீரையை உப்பு தண்ணீரில் அலசி பின்னர் சாதாரணநீரில் கழுவிக் கொள்ளவும். பின் கீரையை பொடியாகநறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும்சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

பலன்கள்:

        இது வேகவைக்காததால் சத்துக்கள்நிறைந்த நார்ச்சத்து மிக்க பொரியலாகும். நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் வெப்பத்தை குறைக்கும்.