Contact Us

Tips Category View

கேரட் அவுல்

தேவையான பொருட்கள்:

  • அவுல்-100 கிராம் 
  • கேரட்-20 கிராம் 
  • கேரட்துருவல்-20 கிராம் 
  • உப்பு - 1/2 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
  • தேங்காய்துருவல் - 25 கிராம் 
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

      முதலில் கேரட்டை சிறிதுதண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறியவுடன் அவுலுடன் கேரட் விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் அனைத்தும் சேர்த்து கலந்து பரிமாறவும்.

பலன்கள்:

        கேரட்டில் வைட்டமின், கரோட்டினாய்டு உள்ளன. சீரகம், மிளகுத்தூள் ஆகியவை வயிற்றைச் சுத்தம் செய்கின்றன. சிறுநீரகத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.