Contact Us

Tips Category View

கொத்தமல்லி அவுல்

தேவையான பொருட்கள்:

  • அவுல் - 100 கிராம்
  • கொத்தமல்லி - 30 கிராம்
  • இஞ்சி - 10 கிராம்
  • உப்பு -தேவைக்கேற்ப
  • சீரகத்தூள் -1/4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • தேங்காய்துருவல் - 25 கிராம்
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

      முதலில் கொத்தமல்லி தழையையும்,இஞ்சியையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய அவுலில் கொத்தமல்லி, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் இவற்றுடன் கலந்து பரிமாறலாம். இது இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தஆரோக்கிய உணவாகும்.

பலன்கள்:

     உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு. பசியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக கலக்க உதவி புரிகிறது.