Contact Us

Tips Category View

அவுல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

  • அவுல் -100 கிராம்
  • தேங்காய்பால் -100 மில்லி லிட்டர் 
  • பட்டைகிராம்-அரை டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் -1 டீஸ்பூன் 
  • இஞ்சி,பூண்டு-2 டீஸ்பூன் 
  • தக்காளி, வெங்காய விழுது-2 டீஸ்பூன் 
  • கேரட்,பீன்ஸ்,சோயாபீன்ஸ் மூன்று சேர்த்து -50 கிராம் 
  • உப்புதேவையான அளவு 
  • தேங்காய்துருவல்-25 கிராம் 
  • பொடியாகநறுக்கிய புதினா இலை சிறிதளவு

செய்முறை:

             கரட் பீன்ஸ், சோயாமூன்றையும் பொடியாக நறுக்கி ஆவியில் வேகவிடவும். அவுலை நன்கு தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்துவிட்டுதேங்காய் பால் ஊற்றி ஊறவிடவும்.அவுல்ஊறியவுடன் ஆவியில் வெந்த காய்கறிகளையும், பட்டைகிராம்பு பொடி, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி, வெங்காய விழுது தேவையான அளவு உப்பு இவையனைத்தும்சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து புதினா இலை தூவி பரிமாறலாம். செயற்கை மசாலா கலக்காத ஆரோக்கியமான அவுல் பிரியாணி உடலுக்கு மிகவும் நல்லது.

பலன்கள்:

       வைட்டமின் ஏ.பி. காம்பள்க்ஸ்சி. இரும்புசத்து, பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. இரத்த உற்பத்திக்கு உதவும் பொருட்கள் இதில் உள்ளன. கண்களை காக்கும் சுரோட்டினாய்டு சத்துக்களும் நிறைந்துள்ளது.