தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேங்காய் பால் தயிர் தேவைப்படுவதற்குமுந்தையநாள்இரவேஒருமுழுத்தேங்காயின்கெட்டிப்பாலைஎடுத்துஅதில்ஒருஎலுமிச்சையின்சாறைஊற்றிவைத்தால்அடுத்தநாள்காலைஅதுதேங்காய்பால்தயிராகதயாராகிஇருக்கும்.
அவுல் தயிர்சாதம்செய்முறை:
அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். அவுல் 10 நிமிடம் நன்கு ஊறியவுடன் தேங்காய் பால் தயிரை ஊற்றிகலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், இஞ்சி. பச்சைமிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றையும் சேர்த்துகலந்து கொள்ளலாம். இறுதியாக கேரட் துருவலை தூவி பரிமாறலாம்.
பலன்கள்:
தயிர், உணவுக்கு கூடுதல்சுவையை அள்ளித்தருகிறது. இதில் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து சரிவிகிதத்தில் கலந்துள்ளன. எலும்பு, பல் தசைமண்டல வளர்ச்சியைஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்கள் நிறைந்த இந்த உணவு சளி, இருமல், மற்றும் நோய் தொற்றுகளில் இருந்துகாக்குகிறது.