Contact Us

Tips Category View

ருமாடிகோ சிரப்

தேவையான பொருட்கள்:
1. திரிகடுகு -16 கி.
2. வேலிப்பருத்தி - 1 கி.
3. வாத நாராயணன் - 50 மி.கி.
4. குப்பைமேனி - 50 மி.கி.
5. ஓமம் - 1 கி.
6. சர்க்கரை - 6 கி.

செய்முறை:
மேலே குறிப்பிட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தைத் தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமாக பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.

அளவு: 
5  10 மி.லி. வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் அல்லது பின் உட்கொள்ளலாம்.

தீரும் வியாதிகள்:
மூட்டுவலி, மூட்டு வீக்கம், இடுப்புவலி, முதுகு வலி, உடல் வலி மற்றும் வாத நோய்கள்.